Madras Kural

டெங்கு காய்ச்சல் தடுப்பில் அரசு தீவிரம்!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு, வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி தமிழ்நாடு முழுவதும் மருத்துவமுகாம்களை நடத்தும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

ஏடிஸ் வகை கொசுவால் பரவும் தொற்றுதான் டெங்குக் காய்ச்சல் என்கிறார்கள் . DEN-1, DEN-2, DEN-3 மற்றும் DEN-4 ஆகிய நான்கு முக்கிய வைரஸ்கள், நோயை உண்டாக்குகிறது.
டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபருக்கு எலும்புகள் உடைவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதால் ’எலும்பு முறிவு காய்ச்சல்’ என்றும் இதை குறிப்பிடுகிறார்கள். கடுமையான தசை- மூட்டு வலியை ஏற்படுத்தும் டெங்குக் காய்ச்சலால் உலகளவில் ஆண்டுக்கு சற்றேர 450 மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள் என்கின்றன தரவுகள்.
அதிக காய்ச்சல், 105ºF (வரை), கடுமையான தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி, மார்பு, முதுகு அல்லது வயிறு- கைகால்கள் மற்றும் முகம் வரை பரவும் சிவப்பு சொறி, கண்களுக்குப் பின்னால் வலி, குமட்டல் மற்றும் வாந்தி வயிற்றுப் போக்கு ஆகியன இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள்.


கொசுக்கள் மற்றும் ’லார்வா’ புழுக்கள் உற்பத்தியை அழிக்கத் தேவைப்படும் அத்தனை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. பள்ளி, பூங்காக்கள், கல்லூரிகள், மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வணிக மையங்கள், சந்தைப் பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துணை துணை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். “டெங்குக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, தொடர் மருத்துவமுகாம்கள் நடத்துவது, குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்வது, நிலவேம்பு குடிநீர் விநியோகிப்பது துரிதப்படுத்தவேண்டும் – அதேபோல், பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் டெங்குக்காய்ச்சல் பரவல் அதிகமாகி வருவதால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டோர் வருகையை சுகாதாரத் துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது ! ஜான்சிராஜா

Exit mobile version