இந்தியாவிலுள்ள 70 கோடி மக்களின் ரகசியங்களை திருடி விற்றதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வினய் பரத்வாஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவிலுள்ள 24 மாநிலங்களில் இப்படி கணினி வழி குற்றத்தை மிக சாதாரணமாக நிகழ்த்திய ஏழுபேரை ஏற்கெனவே போலீசார் கைது செய்திருந்தனர். முக்கிய நபரான வினய் பரத்வாஜூவை தேடி வந்த நிலையில், தெலங்கானா மாநில சைபராபாத் சைபர்க்ரைம் போலீசாரிடம் அவர் சிக்கிக் கொண்டார்.
கிரிப்டோ மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீட்டாளர்கள், நெட் பிளிக்ஸ், ப்ளிப் கார்ட், அமேசான், வங்கிகள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், போன்-பே, இன்ஸ்டாகிராம், ஜி-பே என நிறுவன வரிசைகளும் தப்பவில்லை. நிறுவன முதலீட்டாளர்கள், வங்கிகளில் கணக்கு வழக்கு வைத்திருப்பவர்கள் கடந்தும் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கணினி வழி குற்றத்தில் கை தேர்ந்த இந்த கும்பல், நாட்டின் மிக உயரிய இடமான ராணுவ முகாமிலும் கை வைத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்தான் பேரதிர்ச்சி. முன்னர் பிடிபட்ட ஏழுபேரும் இப்போது சிக்கிய. வினய்பரத்வாஜூம் சொல்லப் போகும் தகவல்களை வைத்து அவர்கள் விற்ற ரகசியங்களை மீட்டெடுக்கத்தான் முடியுமா? இனியும் இதுபோல் நடக்காமல் தடுக்கலாம். இப்போது நடந்தது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்.
தனி நபர் வங்கிக் கணக்குகளை அவர்களுக்குத் தெரியாமல் எடுப்பது இந்த வகை திருட்டில் பேபி ஸ்டேஜ்தான். எலிமென்டரி, மிடில், ஹைஸ்கூல் ஸ்டேஜ்களும் அதன் பின்னர் காலேஜ் – யூனிவர்சிடிகளும் இருப்பதுதான் அடிவயிற்றைப் போட்டு பிசைகிறது…
ந.பா.சேதுராமன்