
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், “இளநாங்கூர் செட்டிமேடு கூத்த கோவில் வக்காரமாரி மற்றும் 12 கிராமங்களுக்கு, சென்ற புயல்மழை சேத காலத்தின் போது; பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் விடுபட்டுவிட்டது. பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த கிராம விவசாயிகளை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலதாமதம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பன்னிரெண்டு கிராமங்களுக்கும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்” என்று சொல்லப் பட்டுள்ளது.
டி.எஸ்.எஸ்.