Madras Kural

வேன் மோதி 2 பேர் சாவு – நிவாரணம் கோரி மறியல்…

தனியார் கட்டண தபால் சேவை நிறுவன வாகன மோதி காவலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த விவகாரத்தில் உதவியாளரை (கிளீனர்) காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி கிராம மக்கள் கொரியர் (தனியார் தபால் சேவை) நிறுவனத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு(50) அதேபகுதியிலுள்ள தனியார் கட்டண தபால் சேவை நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில்
அங்கு தபால் மூட்டைகளை பட்டுவாடா செய்வதற்காக வந்த வாகனத்தில் இருந்து அதன் ஓட்டுனர் கருப்புசாமி(24) கீழே இறங்கி வந்து காவலாளி பிரபுவுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென ஓட்டுனரின் அனுமதி இன்றி அவரது உதவியாளர் ரூபன்(18) வாகனத்தை இயக்கியதால் அது கட்டுப்பாட்டை இழந்து அங்கே நின்றிருந்த வாகனம் ஓட்டுநர் பிரபு மற்றும் கருப்புசாமி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காவலாளி பிரபு, ஓட்டுநர் கருப்புசாமி ஆகிய இருவரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்திற்கு காரணமான ஓட்டுனரின் உதவியாளர் ரூபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் உயிரிழந்த காவலாளி பிரபுவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சம்பந்தப்பட்ட தனியார் கட்டண தபால் சேவை நிறுவனத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், தபால் சேவை நிர்வாகம் அதனை பொருட்படுத்தாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊழியர்களை ஏற்றி வந்த வாகனங்களையும் பொதுமக்கள், தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். உரிய இழப்பீடு தொகை குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உத்திரவாதம் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ள கிராம மக்கள் தபால் சேவை நிறுவன நுழைவாயில் முன்பாக பந்தல் போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

P.K.M.

Exit mobile version