Madras Kural

திமுக கவுன்சிலர் மீது பணமோசடி புகார் – உண்மை என்ன?

தி.மு.க. வட்டச் செயலாளரும், வார்டு 199-ன் சென்னை பெருநகர மாநகராட்சி கவுன்சிலருமான சங்கர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்பது புகார். கடந்த வாரம் பெண் ஒருவர் இப்படியான புகார் தெரிவித்திருந்தார்.
புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். புகாரளித்த பெண் தரப்பில் உரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்ற நிலையில் அதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டதற்கு, இன்று நாளை என புகார்தாரர் இழுத்தடிப்பு செய்வதும், ‘இது மோசடியாக ஜோடிக்கப்பட்ட புகார்’ என்ற கருத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம், கவுன்சிலர் சங்கர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 199-வது வார்டு பில் கலெக்டர் (தற்காலிக ஊழியர்) கௌசல்யாதான் புகார் அளித்தவர். அந்த புகாரில், “திமுக கவுன்சிலர் சங்கர் என் மூலமாக பலருக்கு பொதுப்பணித் துறையில் வேலை வாங்கித் தருவதாக நபருக்கு தலா ரூ.2 இலட்சம் வீதம் வாங்கிய வகையில் 50 லட்ச ரூபாய் ஏமாற்றி விட்டார். விசாரித்து நடவடிக்கை எடுங்கள்” என கூறியிருந்தார். பெருநகர தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், செம்மஞ்சேரி போலீசார் புகாரின் மீது விசாரணை வருகின்றனர்.

வார்டு 199- ன் திமுக கவுன்சிலர் சங்கர் குறித்து மாற்றுக்கட்சியினர், மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகள் அவர்மீதான புகாருக்கு நேர்மாறாக இருக்கிறது.

👆”கவுன்சிலர் சங்கர், அடிப்படையில் வசதி படைத்தவர். உதவிகேட்டு வருகிற பொதுமக்களின் தேவைக்கு தகுந்தது போல், பணமாகவோ பொருளாகவோ கொடுத்து உதவி செய்யக் கூடியவர், அவர் செலவு செய்த பணமே பல லட்சம் இருக்கும். அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து சிலரின் தூண்டுதலால் இதுபோன்ற புகார்கள் கொடுக்கப்பட்டு விடுகிறது. மழைநீர்க் கால்வாய், கழிவு நீர் வடிகால்வாய், சாலை செப்பனிடுதல் போன்றவை குறித்த பணிக்கான ஒப்பந்ததாரர்கள் வந்தாலும் திட்டப் பணிகள் தரமாக இருக்கவேண்டும் என கூறுவாரே தவிர கமிஷன் தொகையை கேட்க மாட்டார். மாறாக, அப்பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்து சாப்பிட்டு போங்கள்” என கூறுவார், என்கிறார்கள்.

புகார்தாரரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? புகாரில் உண்மை இருக்கிறதா? செம்மஞ்சேரி போலீசாரிடம் விசாரணை அறிக்கையை கேட்டுக் கொண்டே இருக்கிறார் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ். அதை இன்னும் கொடுக்கவில்லை போலீசார் என்ற நிலைதான் உள்ளது. பில் கலெக்டர் கௌசல்யா கொடுத்துள்ள புகாரில் உண்மை இருந்தால் அது வேறு. கவுன்சிலர் சங்கர் மீது நடவடிக்கை எடுத்து விடலாம். பொய்யான புகார் என்றால் அதை கொடுத்தவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க முடியும்.? விசாரணை முடிவில் உண்மை எந்தப் பக்கம் இருக்கிறது என்று வெளியில் வரத்தானே போகிறது…

பிரீத்தி எஸ்.

Exit mobile version