பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கழிவறைகளின் இரும்புக் கதவுகள் மற்றும் தாழ்ப்பாள்கள் மூட முடியாதபடி அமைந்து இருப்பதால் கழிவறை பயன்படுத்தப்படாமலே பூட்டி வைத்து நாறிக் கொண்டிருக்கிறது. இப்படி கழிவறையை அலட்சியத்துடன் அதிகாரிகள் வடிவமைப்பு செய்த வகையில் 5 லட்ச ரூபாய் மக்களின் நிதிப்பணம் வீணடிக்கப் பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓபுளாபுரம் ஊராட்சியில் அடங்கியது எளாவூர். இங்குதான் 2021-ல் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணிகள் தொடங்கி 2022- இறுதியில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கழிவறைக்கு பொருத்தப்பட்ட இரும்புக்கதவுகள் மற்றும் தாழ்ப்பாள்கள் உள்ளே வெளியே மூட முடியாதவாறு வடிவமைக்கப்பட்டு இருந்ததால் கழிவறையை எளாவூர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை. அதோடு அந்த கழிவறையே, தரமற்ற முறையில் கட்டப்பட்டும், மேற்கூரை எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்தோடு இருப்பதும் கூடுதலாய் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இயற்கை உபாதையை வெளியேற்ற அந்த கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை
. பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது, குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் சம்பந்தப்பட்ட கட்டிட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டில் உள்ளனர்.
நம்பி