Madras Kural

லஞ்சப்புகார் ! காத்திருப்போர் பட்டியலில் போலீஸ் இன்ஸ்பெக்டர்…

சென்னையில்

லஞ்சம் கேட்ட புகாரில் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். புகாரின் பேரில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரோகிணி.

நகைக்கடை திருட்டு வழக்கு ஒன்றில் ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டதாக இவர் மீது புகார் எழுந்தது. விசாரணையின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோகிணி மீது சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இன்ஸ்பெக்டர் ரோகிணியுடன் கான்ஸ்டபிள்கள் மெல்வின் மற்றும் தங்கராஜ் ஆகியோரும் லஞ்சப்புகாரில் சிக்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மூவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ராஜ்- செல்வா

Exit mobile version