Madras Kural

மக்களின் நன்மதிப்பை பெற்ற போலீசுக்கு கமிஷனர் பாராட்டு!

மக்களைப் பாதுகாக்கும் போலீஸ் (காவல்) பணியை மனிதநேய மக்கள் பணியாகப் போற்றி செயல்படுதல் அவசியம் என்பதை போக்குவரத்து போலீஸ் ஏட்டையா(தலைமைக்காவலர்) உணர்த்தியுள்ளார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அவரை நேரில் வரவழைத்து தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். செய்ன்ட் தாமஸ்மலை போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர், கே. சாலமன் சதீஷ். (த.கா.20254) செய்ன்ட் தாமஸ்மலை போலீஸ் லிமிட்டில் உள்ள, மணப்பாக்கம், பிள்ளையார் கோயில் சந்திப்பில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அன்றாடம் அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் சிறுமி மோனா மிர்தன்யாவின் பார்வையில் ஏட்டய்யா சாலமன் சதீஷின் சிறப்பான காவல் பணி, மனநிறைவைக் கொடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏட்டய்யா சாலமன் சதீஷை அங்கீகரிக்கும் பொருட்டு அவரை நேரில் சந்தித்து அவரது பணியை பாராட்டி ஒரு டைரியை பரிசளித்துள்ளார். இதை அறிந்த பகுதி பொதுமக்கள் ஏட்டய்யா சாலமன் சதீஷையும், சிறுமி, மோனா மிர்தன்யாவையும் வெகுவாகப் புகழ்ந்தும் பாராட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பணிபுரிந்து வரும் போக்குவரத்து தலைமைக்காவலர் திரு.சாலமன் சதீஷின் பணியை பாராட்டி பரிசளித்த சிறுமி மோனா மிர்தன்யா ஆகிய இருவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவனத்துக்கும் இது செல்லவே அவரை நேரில் வரவழைத்து பாராட்டினார்.

– விகடகவி எஸ். கந்தசாமி.

Exit mobile version