
கோவை பத்திரிகையாளர் மன்றத்துக்கான தேர்தல் அதிகாரி பாலமுருகன், 2026-2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்.
தலைவர், செயலாளர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் (ம) ஆறு செயற்குழு உறுப்பினர்கள் என 13 பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பாலமுருகன் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மன்றத்தின் புதிய தலைவராக சுஜித், செயலாளராக சௌந்தர் மோகன், பொருளாளராக ரமேஷ் குமார், துணைத் தலைவர்களாக நிதின், யு.கே. ரவி, இணைச் செயலர்களாக ரமேஷ், கார்த்திக் (ம) செயற்குழு உறுப்பினர்களாக வைர பெருமாள், பாஸ்கர் பாண்டியன், தாமோதரன், பால்ராஜ், பிரசன்னா, ஜீவா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
முன்னதாக கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 30வது பொதுக்குழுக் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், மன்றத்தின் முன்னாள் தலைவர் காமராஜ், முன்னாள் செயலாளர் தங்கராஜ், முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் தலைமை வகித்தனர்.
மன்றத்தின் ஆண்டறிக்கையை தங்கராஜ் தாக்கல் செய்து உரையாற்றினார். மன்றத்தின் வரவு செலவு அறிக்கையை ரத்தன்குமார் தாக்கல் செய்தார்.
பொதுக்குழுவில் எண்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.