சென்னை மாதவரத்தில் உள்ள ஆட்டு சந்தையில், விற்பனைக்காக செம்மறி ஆடுகள் குவிந்து வருகிறது. இம்மாதம் 28ஆம் தேதி இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்தும், ஏராளமான செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டை விட தற்போது விற்பனை சூடு பிடித்துள்ளது, ஒரு செம்மறி ஆடு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய்வரை நல்ல விலைக்கு விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொன்.கோ.முத்து