சென்னை சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது, புனித அன்னை மழை மலை மாதா ஆலயம்.
ஆலயத்தின் 10-ஆம் ஆண்டு கொடியேற்றுவிழாவுக்கு கிறிஸ்தவ சமூக நீதிப்பேரவை நிர்வாகி ஆ.ரவிச்சந்திரன் தலைமை தாங்க செம்மஞ்சேரி போலீஸ் எஸ்.ஐ. சுரேஷ், சின்னமலை பங்கு தந்தை வார்த்தையானவர் இ.பி. டோமினிக் தாமஸ் ஆகியோர் அன்னையின் புனித கொடியை ஏற்றி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சூ.க.விடுதலை செழியன், தா.இளையா, செம்மஞ்சேரி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.ஞானசேகர், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை நிர்வாகி பா.ஸ்டெல்லாமேரி மற்றும் விசிகவைச் சேர்ந்த ஏ.சங்கர், கு.நந்தகுமார், க.பரத், அ.லாரன்ஸ், இரா தாமு, ஏ.ஏசு ஆகியோருடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
நிகழ்வில் பங்கேற்ற விசிக நிர்வாகி, சூ.க.விடுதலைச் செழியன் ஆலயத்தின் செயல்பாடுகளையும் தலைமையேற்று நடத்தும் ரவிச்சந்திரனையும் பாராட்டினார். அப்போது பொதுமக்கள் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவு – குளிர்பானத்தை விடுதலைச் செழியன் வழங்கினார்.
பிரீத்தி எஸ்.