இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க சிஐஐ–யங் இந்தியன்ஸ் உடன் கைகோர்க்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமல்ல, அது இந்தியர்களின் உணர்வு சம்பந்தமானது. எனவே அதன் அடிப்படையில், இந்தியாவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்கும் வகையில் அதை எதிர்த்துப் போராட “சிஐஐ–யங் இந்தியன்ஸ்” அதற்கான பயணத்தை துவங்கி உள்ளது. இந்த பயணத்தில் ஐபிஎல் கிரிக்கெட் உலகின் வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடைபெற உள்ள ‘ப்ளே பார் காஸ் கேம், யி மசூம் கோப்பை- 2023’ கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ப இருப்பதாக அறிவித்தது.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், சிஐஐ-யங் இந்தியன்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஐபிஎல் போட்டி துவங்கிய 2008–ம் ஆண்டு முதல் விஸ்வநாதன் சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பி.அசோக் சிகாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டாண்மை குறித்த தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட ஒய்.ஐ. தேசியத் தலைவர் திலீப் கிருஷ்ணா கூறுகையில், “குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது என்பது நமது முதன்மைப் பொறுப்பாகும். இந்த மசூம் கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூலம் குழந்தை துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை உடல் ரீதியாகவும் டிஜிட்டல் ரீதியாகவும் அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வதற்கான சரியான நடவடிக்கையை நாங்கள் எடுத்து இருப்பது குறித்து, அதாவது கிரிக்கெட் மூலம் கொண்டு செல்ல இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
மணியா