Madras Kural

இராணி அண்ணாநகரும் 896 வீடுகளும் – குமுறும் பொதுமக்கள் …

தமிழக அரசின் 2025-2026-ஆம் நிதி ஆண்டு ஆண்டு பட்ஜெட்டில் சென்னை இராணி அண்ணாநகர் திட்டப்பகுதியில் அமைந்துள்ள 896 வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கக்கோரி நாளை (12.03.2025 புதன்கிழமை) காலை 10 மணிக்கு இராணி அண்ணாநகர் பிரதான நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

எஸ்.வேதநாயகம், ஏகாசிநாதன், கே.என்.
கருணாநி, எஸ்.என்.பாஸ்கர், கே.
ஜீவானந்தன், ஆர்.நாராயணன் உள்ளிட்ட குடியிருப்பு நிர்வாகிகள் இதை முன்னெடுக்கின்றனர்.

இராணி அண்ணாநகர் திட்டப் பகுதியில் அமைந்துள்ள 1 முதல் 22 பிளாக் வரையிலான 896 குடியிருப்பு பகுதிகள், 2021-ம் ஆண்டில் தமிழக அரசின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வாழத்தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் புதிய குடியிருப்புகள் கட்டித் தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை.

14.03.2025 அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட உள்ள 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் இராணி அண்ணாநகர் திட்டப்பகுதியில் வாழத்தகுதியற்று, சிதலமடைந்துள்ள குடியிருப்புகளை இடித்து புதிய குடியிருப்புகள் கட்டி தருவதற்கான நிதி ஒதுக்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

டி.எஸ்.எஸ்.

Exit mobile version