ஐந்து வயது வரையிலான மழலைகளுக்கு ஏற்ற உற்சாக விளையாட்டுகளில் முக்கிய அங்கம் வகிப்பது ரங்கராட்டினம் என்றால் அது மிகையல்ல. ரங்க ராட்டின வரிசையில் வண்ண வண்ண குதிரைகளில் அமர்ந்தபடி மழலைகள் ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சிக்கு ஏது விலை? எட்டுநாட்களில் 10 ஆயிரம் குழந்தைகள் அந்த வகையில் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர்… இப்படியொரு தரமான சம்பவத்தை சத்தமில்லாமல் செய்து முடித்துள்ளது சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக.
சோழவரம் தெற்கு ஒன்றியம், பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு முனீஸ்வரர்- அங்காளேஸ்வரி திருக்கோயில் திருவிழா நாளில் ரங்க ராட்டினங்கள் சுற்ற ஆரம்பித்து விட்டது. மாதவரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குறுதிகளில் மழலைகளுக்கு விலையில்லா ரங்கராட்டின சேவை என்பதும் ஒன்று. சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. வுமான எஸ். சுதர்சனம் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே. கருணாகரன் ஆகியோர் விலையில்லா ரங்க இராட்டினம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து மழலைகளின் மனதை குளிர வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
– பிரீத்தீ எஸ்.
