Madras Kural

ரூபாய் 4.5 கோடி மோசடி- இருவர் கைது!

சென்னையைச் சேர்ந்த (M/s Pers Enterprises Pvt Ltd) நிறுவனத்திற்கு, M.S.Associates என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர், மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்வதாகக் கூறி வங்கி பரிவர்த்தனை மூலம் ரூ. 4.50 கோடி ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

நண்பரான காளையப்பன் @ குமாருடன் இணைந்து ஸ்ரீதரன் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ‘எம்.எஸ். பெர்ஸ் என்டர்பிரைசஸ் பி.லிட்’ டுக்கு சொன்னபடி மருத்துவ உபகரணம் எதையும் வாங்கிக் கொடுக்கவில்லை என தெரிகிறது. மருத்துவ உபகரணங்களை கொடுக்காமலும், அதற்காக வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஸ்ரீதரன் ஏமாற்றி வருவதாக கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எம்.எஸ்.அசோசியேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் மற்றும் காளியப்பா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த காளையப்பன் @ குமார் காளையப்பன் ஆகியோர் திட்டமிட்டு நம்பவைத்து ஏமாற்றியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு (EDF-1) உதவி கமிஷனர் ஜான்விக்டர் தலைமையிலான சிறப்பு குழுவினர், மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த திருவான்மியூர் ஸ்ரீதரன் (60) திண்டுக்கல் குமார் (எ) காளையப்பன் (56) ஆகியோரை கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் நடுவர் (CCB & CBCID) நீதிமன்ற நீதிபதி முன் இருவரையும் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

பிரீத்தி எஸ்.

Exit mobile version