சென்னை புழல் நடுவண் (மத்திய) சிறையில் ‘கேரம்’ விளையாட்டில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் ஐந்துபேர் மீது புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை புழல் நடுவண் சிறையில் உள்ள, “விசாரணை கைதிகள் தனி பிரிவு- சிறை” கட்டிடத்தில் நேற்று மாலை கைதிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கேரம் போர்டு விளையாடி கொண்டிருந்தனர். கஞ்சா வழக்கில் கைதான சிரில்ராஜ், கொலை வழக்கில் கைதான சதீஷ் ஆகியோருக்கும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாகராஜ், வினோத், ஜான், யுவராஜ், தீனா ஆகிய ஐவருக்கும் இடையே அப்போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றி மோதலாக மாறியது. இரு தரப்பும் கடுமையாக அப்போது தாக்கிக் கொண்டனர்.
இதனால் சிறை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு விரைந்த சிறைக் காவலர்கள், சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிரில் ராஜ், சதீஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புழல்சிறை தரப்பில் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் ஐந்துபேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சே…