
வெடிகு*ண்டு மிரட்டல் தகவலையடுத்து சீனியர் ஜர்னலிஸ்ட் மணி வீட்டிலும் புதிய தலைமுறை மீடியா அலுவலகத்திலும் போலீசார் மோப்பயா மோப்ப நாயார் உதவியுடன் நள்ளிரவில் போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தமிழ்நாடு போலீஸ் டிஜிபி அலுவலகத்திற்கு இரவு 11.50 மணியளவில் மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர் மிரட்டல் விடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து போலீஸார், புதிய தலைமுறை அலுவலக பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நடந்த சோதனையில், இந்த மிரட்டல், புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சீனியர் ஜர்னலிஸ்ட் மணி வீட்டுக்கும் குண்டு மிரட்டல் வந்ததாக வெளியான தகவலால் போலீசார் அங்கும் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என்பது தெரியவந்தது. இதேபோல் மேலும் சில பத்திரிகையாளர்களுக்கும் மிரட்டல் வந்ததாகவும் ஆய்வின் முடிவில் அது புரளி என்றும் தெரியவந்துள்ளது.
ந.பா.சே