Madras Kural

ரத்த கைரேகை கோரிக்கை மனு!

சத்துணவு திட்ட ஊழியர், காலி பணியிடம் நிரப்பக் கோரி ரத்தத்தில் கைரேகை வைத்து மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

காலி பணியிடங்களை நிரப்புதல், வரையறைக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்துதல், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஊதியமாக 6,750 வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரப்பப்பட்ட கோரிக்கை மனுவில் ரத்த கைரேகை வைத்தது போராட்டத்தின் தன்மையை வெளிப்படுத்தியது.

பொன்.கோ.முத்து

blob:http://madraskural.com/41562c62-059e-4c74-8e14-440a862b590d
Exit mobile version