சென்னை கிழக்கு மாவட்ட பாஜக எஸ்சி- எஸ்டி பிரிவு தலைவர் பாலச்சந்தர் இன்று மாலை படுகொலை செய்யப்பட்டார். சென்னை சிந்தாதரிப்பேட்டை சாமி (நா) தெருவில் டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மர்மநபர்கள் பாலச்சந்தரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். பாலச்சந்தர் படுகொலை குறித்து நம்மிடம் பேசிய பாஜகவினர், “இந்து மக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பாலச்சந்தர் பல்வேறு சமூகநலப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தீவிரமாக இயங்கி வந்தவர், பொதுவான எதிரிகள் என்று அவருக்கு யாரும் இல்லை. அதே வேளையில் அவருக்கு அச்சுறுத்தல் இருந்தது. அவருடைய இழப்பு மிகுந்த வேதனையைத் தருகிறது” என்றனர். “பாலச்சந்தருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப் பட்டிருந்தும் இப்படியொரு கொடூரம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை” என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்கள் சரவணக்குமார், கார்த்திகேயன், முரளிசங்கர், சிவ. விஜயன் உள்ளிட்ட பலர் குற்றஞ் சாட்டுகின்றனர். பாலச்சந்தர் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து சிந்தாதரிப்பேட்டை பகுதி பரபரப்பு நிறைந்து காணப்படுகிறது. சிந்தாதரிப்பேட்டை போலீசார் பாலச்சந்தர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி விட்டு கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விகடகவி எஸ். கந்தசாமி