Madras Kural

தேர்தல் 2026 வெற்றி உத்தி: பாஜக ஆலோசனை|

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

பாஜகவின் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய முன்னாள் தலைவர் வெங்கடேசன், பாஜக மாநில செயலாளர் ஆனந்தபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 11ஆம் ஆண்டு சாதனைகளை வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலின் போது மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் வழிமுறைகள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் களப்பணி ஆற்றுவது தொடர்பான உத்திகளை நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் அன்பாலயா சிவகுமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

P.K.M

Exit mobile version