Madras Kural

கோடிகளில் மாயமான மக்கள் பணம்…

சென்னையில் அமைந்துள்ளது அந்த வங்கியின் மாநில தலைமையகம்.
சமீபத்தில் மெர்க்கன்டைல் வங்கியிலிருந்து ஒரு டாக்ஸி டிரைவர் அக்கவுண்ட்டுக்கு 9ஆயிரம் கோடி ரூபாய் சிங்கிள் பேமண்ட் ஆக போனது. அதேபோல் இன்னொருவருக்கு சில கோடிகள் ஒன் டைம் செட்டில்மெண்ட் போல போனது. பணத்தை சம்பந்தம் இல்லாத ஆள்களுக்கு அனுப்பிய குற்றச்சாட்டு எழவே வங்கி மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் இந்த வங்கியிலும் நடந்திருக்கிறது, ஆனால் இவன் வேற மாதிரி ஸ்டைலில்…

வங்கியில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் ஒருவரின் கணக்கில் ஒன் டைம் ரிலீசாக நாலரை கோடி ரூபாய் போயுள்ளது. விவசாய பெருங்குடி மக்களின் பணத்தை பெருமளவில் வைத்துள்ள வங்கியின் பணம் என்பதால் வங்கியின் அக்கவுண்ட் செக்சனில் உடனே அது தெரிந்து விட்டது. உடனடி விசாரணையில் மற்ற ஊழியர்கள் இறங்கவே, பணத்தை முறைகேடாக சொந்த அக்கவுண்டுக்கு அதாவது நாலரை கோடி ரூபாயை வரவில் வைத்தது வங்கியின் கடைநிலை ஊழியர் என்பது தெரிந்தது. மேலும் உடனுக்குடனே அவர் மூலமாக அந்தத் தொகை பலருக்கு பிரித்துக் கொடுக்கப் பட்டதும் அம்பலமானது.

இதுபற்றி விசாரணைக்கு முன்னரே அறிந்திருந்த வங்கியின் மற்றொரு கடைநிலை ஊழியர், “நாலரை கோடி ரூபாயை நீயே அமுக்கப் பாக்குறியே, உடனே போய் ஊரெல்லாம் சொல்லுறேன்” என்றதும், அவருக்கு சுமார் 50 லட்சரூபாயை கொடுத்துள்ளார், நாலரை கோடி ரூபாயை முதலில் சுருட்டிய வங்கியின் கடைநிலை அண்ணன் கர்மவீரன்…

இருப்பினும் பொதுமக்கள் பணத்தின் மீதான பொறுப்புணர்வோடு உண்மையாகவே ஒரு டீம் களத்தில் இறங்கி விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மிஸ்டர் நாலரை கோடியும் இன்னொரு மிஸ்டர் ஐம்பது லட்சமும் நாம் சங்கத் தலைவன்களாகி விட்டால் யாரும் எதுவும் செய்யமுடியாது என்று முடிவெடுத்து வங்கி ஊழியர் சங்கத்தை அவசர அவசரமாக தொடங்கியுள்ளனர். மிஸ்டர் நாலரை கோடியும் மிஸ்டர் ஐம்பது லட்சமும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளாகி விட்டனர். சங்கம் என்றாலே பத்துபேர் தேவைப்படும் இல்லையா, அந்த அடிப்படையில் சங்கத்தின் மற்ற பொறுப்புகளுக்கும் ஆட்களை சேர்த்துள்ளனர்.

நாலரை கோடி, ஐம்பது லட்சம் என பண மோசடி செய்தவர்களை யாரெல்லாம் கேள்வி கேட்டார்களே அவர்களையே சங்கத்தின் மற்ற பொறுப்புகளுக்கு போலியாக நியமித்துள்ளனர் சங்கத்தலைவன்கள்.. கேள்வி எழுப்பியவர்களின் பெயரிலேயே
போலியான கையெழுத்தைப் போட்டு மோசடி நபர்கள் நடத்திய அடுத்தகட்ட மோசடி, அடுத்தடுத்த விசாரணையை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.

போலியான சங்கத்தின் மீது எப்போதாவது யாராவது நடவடிக்கை என்று போய்விட்டால் தப்பிக்க என்ன வழி என்று யோசித்த மோசடிகுழு, சட்டம் படித்த முன்னாள் எம்.பி., ஒருவர் பெயரை நிர்வாகத்தில் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது…
இப்போது அவருக்கும் சிக்கல் தொடங்கியுள்ளது. இப்படி கோடிகோடி மோசடிகள் என்றாலும் வங்கி விவகாரம் என்பதால் அவர்கள் மட்டத்திலேயே விசாரித்து முடித்து விட்டுத்தான் போலீஸ் புகார் ஏரியாவுக்குள் போவார்களாம்.
நாம்ஸ் அப்படித்தான் இருக்கிறதாம்…
மொத்தத்தையும் தோண்டி கிண்டி கிழங்கெடுக்கிற வேலையில் பெண் அதிகாரி ஒருவர், “வாம்மா காவேரி” என்றளவில் காட்டுகிற வேகம்தான் இப்போது வங்கி ஏரியாவில் ஹாட் டாஃபிக்…

சேது

Na Bha Sethuraman Sethu

Exit mobile version