Madras Kural

படித்தது ஆயுர்வேதம் பார்த்ததோ ஆங்கில மருத்துவம் ! இருவர் கைது…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிலர், சட்ட விரோதமாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரி ஹரிப்பிரியா தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிப்காட் பகுதியில் ஆர்.எம்.பி., படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவமுறையில் சிகிச்சை அளித்து வந்த காட்டுகொள்ளைமேடு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் கவரப்பேட்டை பகுதியில் அதேபோல் சென்னையைச் சேர்ந்த ஞானசுந்தரி ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவமுறையில் இவர்கள் இருவரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுகாரத்துறை அதிகாரி ஹரிப்பிரியா கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். போலியாக செயல்பட்ட மருத்துவர்கள் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பொன்.கோ.முத்து

Exit mobile version