
திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர்- 28)மதியம் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடி,
அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 1,300 கன அடியாக அதிகரிப்பு செய்துள்ளது பொதுப்பணித்துறை.
திருச்சி மாவட்டத்துக்கு ‘டிட்வா’ புயல் காரணமாக, ஆரஞ்சு அலர்ட் விடுத்து பொதுமக்களுக்கான அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
“திருச்சி மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 0431-2418995 என்ற எண்ணிற்கோ அழைக்கலாம்” என திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன்.
அறிவிப்பு செய்துள்ளார். புயல் காரணமாக நாளை (நவம்பர் -29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத்தேர்வு டிசம்பர்- 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக ராமேஸ்வரம் வட்டத்தில் இன்று (நவம்பர் -28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தனர்.
ஒரு அணிக்கு 30 பேர் என்ற கணக்கில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு தலா 1 அணி (ம), புதுவைக்கு 2 அணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், 2025 நவம்பர் 24 ஆம் தேதி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 5-ஆம் தேதி நடக்கும் என நிர்வாகம் அறிவிப்பு.
நாளை (நவம்பர்-29) நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது, சென்னை வானிலை ஆய்வு மையம். ‘டிட்வா புயல்’ உருவானதை அடுத்து நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில், 4ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.
சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை (பாண்டிச்சேரி) ஆகிய ஐந்து துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது
கண்காணிப்பு அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்து செல்லவும், மீட்பு நடவடிக்கை குறித்து, உடனடியாக ஆய்வு மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
பியெஸ்கேபி