Madras Kural

ஜாதகத்தில் 5-ஆம் பாவமும் 9-ஆம் பாவமும் முக்கியம்! (பகுதி-1)- பூம்புகார் ஜி. ஸ்ரீனிவாசன்


ஒருவருக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் வரும். மகளுக்கு திருமணம் தாமதமாகிறது. மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. பிள்ளைகள்
சரியாக படிக்கவில்லை. தொழில் நஷ்டம் ஏற்படுகிறது என்று ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வித
பிரச்னை இருக்கிறது. இவைகளுக்கு ஜோதிடரீதியாக பரிகாரங்கள் செய்தால் அவர்களுக்கு அந்த பிரச்னை
தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.
பரிகாரம் என்று சொல்லும்போது சில ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் செய்வதற்கு அதிக செலவாகிறது
என்று கூறப்படும் அதே நேரத்தில், அவ்வளவு செலவு செய்து பரிகாரங்கள் செய்தும் கஷ்டம் குறையவில்லை
என்று கூறுபவர்களும் உண்டு. இது தவிர பரிகாரங்கள் எல்லாம் வேஸ்ட், பணம் பிடுங்கும் விவகாரம்.
என்ற குற்றச்சாட்டுகளுக்கும் குறைவில்லை. ஆனால் உண்மையிலேயே பரிகாரம் வேலை செய்கிறதா? என்றால் வேலை செய்கிறது. சிம்பிளான பரிகாரம் செய்தேன் எனக்கு பலன் கிடைத்தது என்று சொல்பவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
பண்டைய ஜோதிட நூல்களில் பரிகாரம் என்பதற்கு இதுவரை தனியான புத்தகம் எதுவும் இருப்பதாக
தெரியவில்லை. வட மொழியில் ஒரே புத்தகம் உள்ளது லால் கிதாப் எனப்படும் அந்த புத்தகம் சிவப்பு
கலரில் இருப்பதால் அது சிவப்பு புத்தகம் என்றும் அழைக்கப்படுகிறது.. அதில் எந்த கிரகத்திற்கு என்ன
பரிகாரம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலத்தில் சிலர் பரிகாரத்திற்கு என்று சில
புத்தகங்களை எழுதியுள்ளனர். அவை அந்த ஜோதிடர்களின் அனுபவத்தை கொண்டு எழுதப்பட்டதாக இருக்கும்
என்ற கருத்தும் நிலவுகிறது.
பரிகாரங்கள் சிலருக்கு பலிக்கிறது சிலருக்கு பலிப்பதில்லையை ஏன் ? என்ற கேள்வி எழும்போது அந்த
ஜாதகரின் ஜாதகத்தில் 5-ஆம் பாவம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம், 9 -ஆம் பாவம் எனப்படும்
பாக்கியஸ்தானம் போன்றவற்றை ஆராய்ந்து அந்த பாவ அதிபதியான கிரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?
என்பதை ஆராய்ந்து அந்த பாவங்கள், பாவாதிபதிகள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், என்பதை
பார்த்து இந்த ஜாதகருக்கு எந்த விதமான பரிகாரம் செய்தால் பலன் அளிக்கும் .. என்பதை ஆய்வு செய்து
அதன்பிறகு கூறப்படும் பரிகாரங்களை செய்யும்போது அது ஜாதகருக்கு பலன் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
ஜோதிடம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று வானியல் மற்றது ஆன்மீகம். ஒரு குழந்தை பிறக்கும் போது வானில் என்ன பாகை கலைகளில் கிரகங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிட்டு ஜாதகம் கணிப்பதும், கோட்சார ரீதியாக (தற்கால கிரகநிலை) கிரகங்கள் என்ன பாகை கலைகளில் உள்ளது என்பதை கணக்கீடு செய்வதும் வானியல் ஆகும். அவ்வாறு கணிக்கப்படும் ஜாதகத்திற்கு பலன் சொல்வது என்பது, ஜோதிடம்; அதாவது ஆன்மீகமாகும்.
ஜோதிடம் தெரிந்த ஒருவருக்கு தெய்வானுகூலம் இருந்தால் அவர் சொல்லும் பலன்களும், பரிகாரங்களும்
பலிக்கும் என்றும் கூறப்படுகிறது.
சரி பரிகாரம் என்றால் என்ன? இந்த கேள்வி பலருக்கும் எழக்கூடிய நியாமான கேள்வி ஆகும். இதற்கான
பதில் தான் என்ன? அடுத்த பதிவில் இன்னும் விரிவாய் சொல்கிறேன்…

(ஜோதிட ரத்னா , பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி.ஸ்ரீனிவாசன் M.A (Astrology)
90800 82200 – வாட்சப்: 94999 02400)

Exit mobile version