(பரிகாரம்-மற்றும் பகுதி- 2)
வானத்தில் எண்ணற்ற கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட கிரகங்கள் மட்டுமே மனித வாழ்க்கையுடன் தொடர்பு வைத்துள்ளன என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்து, அதனை 360 பாகைகளில் எங்கு இருக்கிறது என்பதையும் கணக்கிட்டு; இந்த நாளில், இந்த பாகை கலையில் கிரகங்கள் உள்ளன என்று கூறி இருக்கிறார்கள். இன்றும் பஞ்சாங்கங்களின் துணையுடன் கிரகங்கள் உள்ள பாகை யை நம்மால் தெரிந்து கொள்ள இயலும். நாம் வானத்தை நோக்கும் போது நமது கண்ணிற்கு தெரியும் முழுவட்டத்தில் அதாவது 360 பாகையில் உள்ள 27 நட்சத்திரங்களையும், அவை இருக்கும் பாகைகளையும்; அதேபோல் கிரகங்கள் இருக்கும். பாகையையும் கணக்கிட்டு; அதை 12 கட்டங்களிலும் குறிப்பது தான் ஜாதகம்.
(படம்: பஞ்சாங்க கணித மணி பட்டத்தை காஞ்சி பீடாதிபதியிடம் பெறுகிறார் கட்டுரையாளர் ஜி.ஸ்ரீனிவாசன்)
360 பாகை கொண்ட ஒரு வட்டத்தை 12 கட்டங்களாக பிரிக்கும் போது ஒரு கட்டத்திற்கு 30 பாகை வீதம் கணக்கிடப் படுகிறது. இந்த 30 பாகைதான் ராசி என்று அழைக்கப்படுகிறது. இந்த 12 ராசிகளையும் சூரியன் சந்திரனுக்கு தலா ஒரு ராசி, மற்ற செவ்வாய் முதல் சனி வரையான 5 கிரகங்களுக்கும் தலா இரண்டு ராசிகள் வீதம் ஒதுக்கி அதை அந்த கிரகங்களின் சொந்த வீடு என்று அழைக்கிறார்கள். ராகு, கேதுகளுக்கு சொந்த வீடு ஒதுக்கப் படவில்லை. காரணம் அவை கிரகங்கள் அல்ல. சூரியன் , சந்திரன் சுற்றி வரும் பாதையில் உள்ள வெட்டுப்புள்ளிகள் ஆகும். ஆனால் இவை ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றுக்கு பலன்களும் பரிகாரங்களும் சொல்லப் பட்டுள்ளன. இந்த பலன்கள் சரியாக உள்ளதாகவும் அனுபவ பூர்வமாக தெரிய வந்துள்ளது. கிரகங்களில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், பூமியின் மேற்பரப்பில் விழுகின்றன. ஒரு நாளின் 24 மணி நேரமும் சூரியன் முதல் சனி வரை உள்ள 7 கிரகங்களின் புற ஊதாக் கதிர்கள், மனிதன் மீது படுகின்றன. இந்த புற ஊதாக்கதிர்களுக்கு மனித உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி உள்ளதாக அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்கள் எப்படி தாக்கத்தை ஏறப்டுத்துகின்றனவோ அதே போல் தான். அப்படி இருக்க ஒரு குழந்தை பூமியில் பிறக்கும் போது வான மண்டலத்தில் பல்வேறு பாகைகளில் உள்ள கிரகங்கள், வெளியிடும் புற ஊதாக் கதிர்கள் குறிப்பிட்ட (கோணத்தில்) ஆங்கிளில் மனித உடலின் மீது தாக்கும் போது அது அந்த குழந்தையின் உடல் மற்றும் மூளைப்பகுதியில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதுதான் 7 கிரகங்களுக்கும் மனிதருக்கும் உள்ள தொடர்பு. கோட்சார ரீதியாக (தற்கால நிலை) கிரகங்கள் 360 பாகை வட்டப் பாதையில் சுற்றி வரும்போது அந்த கிரகங்களில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள், மனிதன் மீது வேறு ஆங்கிள்களில் விழும்போது அது சில மாற்றங்களை தருகிறது. ஜனன காலத்தில் குறிப்பிட்ட ஆங்கிள்களில் குழந்தையின் மீது படும். புற ஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் தற்காலத்தில் கிரகங்களில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திற்கும் மாறுபாடு இருப்பதால் அதனால் உடலிலும், மனதிலும் தூண்டுதல்கள் ஏற்பட்டு (அதனால்) மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் கிரகங்கள் இருக்கும் நிலைமாறி அதிலிருந்து வெளிப்படும் புற ஊதாகதிர்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும் மனதிலும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதுதான் மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் சுகம், துக்கங்களுக்கு காரணமாக அமைகிறது. இதைதான் கிரகசாரம் என்னை ஆட்டிப்படைக்கிறது, என்றனர் நம் முன்னோர்கள்.
(அடுத்த பதிவில்…)
கட்டுரையாளர் : ஜோதிட ரத்னா , பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி. ஸ்ரீனிவாசன் M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண் > 9499902400 – கைபேசி > 9080082200-