Madras Kural

சந்திரபாபுநாயுடு கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது போட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி- தச்சூர் கூட்டு சாலையில் தெலுங்குதேசம் கட்சியின் விவசாயப் பிரிவு (ம) ஐ.டி இளைஞர்கள் பிரிவு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், “சந்திரபாபு நாயுடு, ஒரு கட்சிக்கோ மாநிலத்திற்கோ மட்டும் தலைவர் அல்ல, அவர் ஒட்டுமொத்த தேசத்திற்கே தலைவர்; அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஜெகன்மோகன் ரெட்டி அரசு அவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளது; சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுக்க வேண்டியது தேசத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் கடமை” என தெரிவித்தனர்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவு தெரிவித்தும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கண்டனம் தெரிவித்தும் தொடர்ச்சியாக அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பொன்.கோ.முத்து

Exit mobile version