Madras Kural

‘பிஜேபிக்கு டைம் இன்னும் இரண்டு மாசம்தான்’ : அண்ணாமலை தரப்பு|

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி’- இது நம்ம இயக்கம் (we the leaders) என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்ணாமலை அறிவித்ததையடுத்து, அவர் தொடங்கியுள்ள இயக்கத்தில் தமிழகம் முழுவதும் இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக சொல்லப் பட்டுள்ளது. னர், இந்த நிலையில் பணி விருப்ப ஓய்வு ஐபிஎஸ் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அண்ணாமலை பிறந்தநாள் விழா மற்றும் அவர் தொடங்கியுள்ள புதிய அமைப்பின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலையின் ஆதரவாளரும் – பாஜகவில் இருந்து நேற்று விலகிய அக்கட்சியின் மாநில ஆன்மிக ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவருமான. ஜெ. குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், ‘லட்சத்தில் ஒருவர் கோடியில் ஒருவர்தான் அவதாரம் எடுப்பார், அண்ணாமலை சாதாரண மனிதர் அல்ல எங்கெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறதோ” அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட இறைவன் அவதாரம் எடுப்பார் அந்த அவதாரம் தான் அண்ணாமலை’ என ஆவேசத்துடன்‌ கூறினார்,

அண்ணாமலை குறித்து கருத்து தெரிவித்த திரைப்பட நடிகர் எஸ். வி. சேகரை ஒருமையில் விமர்சனம் செய்து பேசிய பாஜக முன்னாள் நிர்வாகி ஜெ. குமார், தனது உரையை முடித்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கிய பின்னர், மேடையின் எதிரே அமர்ந்திருந்த மற்றொரு பாஜக நிர்வாகி ஒருவர் பழக்க தோஷத்தில் பாஜக whatsapp குரூப்பில் பொதுக்கூட்டம் தொடர்பான புகைப்படங்களை அனுப்பியதால் பாஜக நிர்வாகி ஒருவர் அவரை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து அறிந்து கொண்ட ஜெ.குமார் மீண்டும் மேடையேறி, பாஜகவை தொலைத்தெறிவேன் என்றும் – இரண்டு மாதத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் இங்கே நடக்கும் அப்போது பிஜேபி என்ற கட்சியே இருக்காது, நீ ஆம்பளையாக இருந்தால் இங்கே வந்து மோதி பாரு சவால் விடுகிறேன் என ஆவேசத்துடன் தெரிவித்தார், அண்ணாமலையின் ஆதரவாளர்களால் தமிழகத்தில் நடத்தப்பட்ட இந்த முதல் பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உருவப்படம் இடம் பெற்றிருந்தது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version