திருவள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இலங்கை கடற்படை யினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி வருவதாகவும், இதற்கு தீர்வு காண இலங்கை அரசு சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வதாக கூறிய அவர், இந்தியா கூட்டணி சிதறி விட்டதாகவும் நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி போன்றவர்கள் எல்லாம் அதிலிருந்து வெளியேறி விட்டதாகவும் எனவே நாடாளுமன்றத் தேர்தலில் 350 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மத்திய பாஜக அரசை அமைக்கும் எனவும் திட்ட வட்டமாக தெரிவித்த, எல். முருகன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் எய்ம்ஸ் என்று எழுதி வைத்துக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
P.K.M