Madras Kural

அதிமுகவின் மக்கள் நல போராட்ட கேலிக்கூத்து…

பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய அதிமுக ஆர்ப்பாட்டமாக அமைந்து விட்டது உத்திரமேரூர் போராட்டம்.

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் சிக்கித் தவித்த காட்சியை படம் பிடித்த செய்தியாளர்கள் மிரட்டி விரட்டப்பட்டனர்.

“காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி வாலாஜாபாத் பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” என்பதே ஆர்ப்பாட்ட அஜன்டா.

வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர், .வி சோமசுந்தரம்,அதிமுக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக போராடியவர்கள் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தியதால் டெப்போவிலிருந்து பேருந்தை எடுக்க முடியாமல் நடத்துனரும் ஓட்டுனரும் விழிபிதுங்கி நின்றனர்.
அலுவலகம் செல்வோர் அத்தியாவசிய தேவைகளுக்கு வந்தோர் என அனைவரும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு ஒரு மணி நேரமாக தவித்த மக்கள், பேருந்துகளில் பயணித்தது மட்டுமின்றி அ.தி.மு.க. வினரை திட்டி தீர்த்து விட்டனர்.காட்சிகளை காணொளிகளாக எடுத்த. செய்தியாளரை மிரட்டி விரட்டியது ஆர்ப்பாட்டத்தின் உச்சகட்டம்.

பிரீத்தி எஸ்.

Exit mobile version