தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கக் கோரி அதிமுக மற்றும் பாஜகவினர் வெவ்வேறு இடங்களில் தனித்தனி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வழிகாட்டலில் பாஜகவினரும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வழிகாட்டலில் அதிமுகவினரும் தமிழ்நாடு முழுவதும் கறுப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடசென்னை மாவட்ட வடக்கு அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எமதர்மன் வேடமணிந்த ஒருவர் சாட்டையால் அடித்து போதைப்பொருள் உட்கொண்டவர் உயிரை எடுப்பது போல் சித்தரித்தது அனைவரையும் ஈர்த்தது.
சே