Madras Kural

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர், நள்ளிரவு விசிட்…

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் எழுதியுள்ள செய்திக் குறிப்பு!
“நள்ளிரவு வேளையில் திருவள்ளூரில் ரவுண்ட்ஸ் சென்றிருந்தேன். வடக்கு மண்டல ஐ.ஜி, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ். பி. ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

மாவட்டத்தில் செய்யப்பட்ட இரவு நேர
சட்டம் -ஒழுங்குக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்போது ஆய்வு செய்தேன். நெடுஞ்சாலை ரோந்து, டவுன் ரோந்து, பீட் அதிகாரிகள், ’ஈ.பீட்’ முறையை அமல்படுத்துதல்
ஆகியவற்றையும் , குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகள் மற்றும்
கடைவீதிகளுக்குச் சென்று, அவ்விடங்களில் காவலர்கள் இருப்பது குறித்தும் ஆய்வு செய்தேன்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைத் தடுக்க இரவு நேரங்களில் காவல்துறையின் உயர் பார்வைத் திறன் (visibility) பராமரித்தல் முக்கியம், என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தி விட்டு புறப்பட்டேன்” – இவ்வாறு உள்ளது, தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் அவர்களின் பதிவு.

செல்வா

Exit mobile version