Madras Kural

அதானி துறைமுகமா? ஆளை விடுப்பா…

அதானி துறைமுக விரிவாக்கம் திட்டத்தை தி.மு.க ஆதரிக்கிறதா என்ற ஊடகவியலாளர் கேள்விக்கு “அரசாங்க பிரச்சினையை என்னிடம் கேட்காதீங்க, அமைச்சர், சட்டமன்ற உறுப்பினரிடம் கேளுங்கள்” என்றபடி பதில் கூறாமல் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கடந்து போனார்.

blob:http://madraskural.com/ad9ecc54-5264-4f77-8386-bfbdb1cf1cea

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகையினை வழங்கினார். விழா நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்கள் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினர். “கடந்தபின்னும் அதிமுக ஆட்சியில் அதானி விரிவாக்க திட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை திமுக ஆதரிக்கிறதா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கேள்விக்கு நேரடி பதில் அளிக்காமல், “அரசாங்க பிரச்சனை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அமைச்சர், சட்டமன்ற உறுப்பினரிடம் கேளுங்கள்” என கூறிவிட்டு, அடுத்த கேள்வி கேட்பதற்கு முன்பாக மகிழுந்தில் (காரில்) ஏறி அங்கிருந்து நழுவி சென்றார்.

PKM

Exit mobile version