Madras Kural

நடிகர் ‘போண்டா’ மணி குடும்பத்துக்கு நிதியுதவி-படத்திறப்பு!

அண்மையில் காலமான கேப்டன் விஜயகாந்த், நடிகர் போண்டாமணி, சினிமா பி.ஆர்.ஓ. கடையம் ஆர்.ராஜூ ஆகியோரின் படத்திறப்பு சென்னை
ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. அப்போது போண்டாமணி குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் விழா குழுவினர். நவீன் பைன் ஆர்ட்ஸ் டாக்டர் நவீன் ஆர். பன்னீர்செல்வம் ஏற்பாட்டில்
மூத்த பத்திரிகையாளர் டாக்டர் கே.எம்.சிராஜ்தீன் தலைமை தாங்கி விழாவை வழி நடத்தியதோடு ரூ.10 ஆயிரத்தை போண்டாமணி குடும்பத்துக்கு வழங்கினார்.

நிகழ்வில் பத்திரிகையாளர் கே.லோகநாதன், திருச்சி டாக்டர் பி.மதிகுமார் தஞ்சை டாக்டர் ஐ.பி. அப்துல் மாலிக், ஆர்ஆர்ஆர் சினிமா டாக்டர் சி.ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஐசிஎஃப் பழனி, சமூக சேவகர்கள் சார்லஸ் ரவி, எஸ்.ராஜா ஆகியோர் வரவேற்றனர். கலைமாமணி டாக்டர் லியாகத் அலிகான், நடிகர்கள் சின்னி ஜெயந்த், பூவிலங்கு மோகன், வழக்கறிஞர் முனைவர் இளைய கட்ட பொம்மன், டாக்டர் ஷீபா லூர்தஸ், தொழிலதிபர் ஐயா அந்தோணி, தொழிலதிபர் டாக்டர் காஞ்சி கே.முத்து

நடிகர்கள் கிங்காங், திருப்பாச்சி பெஞ்சமின், முத்துக்காளை, திரைப்படத் தயாரிப்பாளர் டாக்டர் வி.சி. கதிரவன், நடிகை அனுகிருஷ்ணா, டாக்டர் காவலன் கார்த்திகேயன், சமூகசேவகி டாக்டர் ஆர்.சுஜாதா,டாக்டர் ஜெ.குணசேகரன், கல்வியாளர் வசந்திராமன், சமூகசேவகர் என்.ஜின்னா, பத்திரிகையாளர் எம்.கார்த்திகேயன், பிஎஸ்என்எல் – டி.தேவராஜ், டாக்டர் வி.எஸ்.நாராயணா, காஞ்சிபுரம் மெடிக்கல் சுரேஷ், சுசீலாமேரி, சினிமா இயக்குநர் ஜிப்ஸி ராஜ்குமார், பிஆர்ஓ கோவிந்தராஜ், பன்முக கலைஞர் மணிப்பூர் ஹமீதா, டாக்டர் ஜோதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சினிமாவுலகில் பன்முக ஆற்றல் கொண்ட பிஆர்ஓ வாக இருந்தவர் டாக்டர் கடையம் ஆர். ராஜு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தனித்தன்மை நாடறியும். இலங்கைத் தமிழரான நடிகர் போண்டாமணியைப் பொறுத்தவரை திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் மருத்துவ சிகிச்சை சரிவர கிடைக்காத நிலையில் போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து மறைந்துள்ளார். தமிழர், தமிழர் உரிமை, தமிழர் நலன் குறித்து நாளெல்லாம் முழக்கமிடும் எவரும் இலங்கைத் தமிழரான போண்டாமணி நல்வாழ்வுக்கு குரல் கொடுக்கவோ, பொன்பொருள் கொடுத்து உதவவோ முன்வரவில்லை என்பதுதான் வருத்தம்.

சே

Exit mobile version