Madras Kural

பிரத்தியங்கரா தேவி அந்தாதி நூல் வெளியீடு!

நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் முனைவர் ஆர்.பன்னீர்செல்வம் சார்பில், ஆன்மிக திருவிழா- பிரத்தியங்கராதேவி குறித்து ஜெகத்குரு ஆத்ம சைதன்யா இயற்றிய அந்தாதி நூல் மற்றும் ஒலிநாடா வெளியீட்டு விழா நடைபெற்றது.

‘மோகனா ரிதம்ஸ்’ பக்தி இன்னிசைக் கச்சேரி குழுவினரின் இசைமழை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பொழிந்தது.

மூத்த பத்திரிகையாளர் டாக்டர் கே.எம்.சிராஜ்தீன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். ஜெகத்குரு ஆத்ம சைதன்யாவும் கலைமாமணி- புரட்சி இயக்குநர் கா.லியாகத் அலிகானும் சிறப்பு விருந்தினர்கள்.

நிகழ்வின் போது, ஜெகத்குரு ஆத்ம சைதன்யா சுவாமிஜி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிக் கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ பிரித்தியங்கராதேவி திருக்கோயில் ஒலி-ஒளி காட்சியாக மேடை வெண்திரையில் காட்டப்பட்டது.
(சுவாமிஜியின் அரைமணி நேர சிறப்புரை அபாரம். குறிப்பாய் சனாதன விளக்கம்).

உஜ்ஜயினியிலிருந்து வந்திருந்த சாது, விழாவுக்கு ஆசி வழங்கினார். சமூக சேவகர், டாக்டர் காயல் ஆர்.எஸ். இளவரசு, ஜோதிடதிலகம் ஆர்.பாலகிருஷ்ண ரெட்டி, சினிமா தயாரிப்பாளர் லயன் வி.சி. கதிரவன், வழக்கறிஞர் -முனைவர் இளைய கட்டபொம்மன், டாக்டர் ஐ.பி.அப்துல்மாலிக், டாக்டர் சிவாஜி ரவி, டாக்டர் சி.அருண், டாக்டர் சி.ரமேஷ், சார்லஸ்ரவி, ஆன்மிக செம்மல்கள் வி.எஸ்.நாராயணா, ஜி.கோதண்டராமன், மணிமொழி செல்வன், பாபா கார்மேகம், டாக்டர் ஜி.பாலமுருகன், டாக்டர் ஜெ.குணசேகரன், ராயபுரம் தேவராஜ்,

சமூக சேவகர்கள் டாக்டர் ஆர்.சுஜாதா, ஜின்னா, திரைக்கலைஞர்கள் ராஜ்கமல், ரோபோ சங்கர் மற்றும் அவர் குடும்பம், பிரியங்கா, காந்திமதி, சினிமா பிஆர்ஓக்கள் கடையம் ஆர்.ராஜு, சிங்காரவேலு என ஏராளமான பிரபலங்கள் நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சியை கோவலன் எஸ்.பி.விஜய் தொகுத்து வழங்கினார்.

மாலதி லஷ்மன், செந்தில்தாஸ், முகேஷ் என திரையிசைப் பாடகர்கள், மோகனா ரிதம்ஸ் குழுவோடு கலந்து சிறப்பான பாடல்களை கொடுத்தனர். பலகுரல் மன்னன் நடிகர் சின்னிஜெயந்த்,
‘மருதமலை மாமணியே’ என உச்சக்கட்டையில் குழுவோடு சேர்ந்து பாடியது பிரமிப்பாக இருந்தது.

அகமது அலி, ந.பா.சேதுராமன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும்
பல்துறை ஆற்றலாளர்கள் விழாவில் நினைவுப்பரிசு பெற்றதோடு மரியாதை செய்யப்பட்டனர்.
ந.பா.சேதுராமன்

Exit mobile version