Madras Kural

தமிழ்நாடு போலீசில் 2020 – 2022 ஏப்ரல் வரை 850 மரணங்கள்… பின்னணி என்ன?

காவல்துறையில் பணிச்சுமை காரணமாக பலர் விட்டோடியாக பணியை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள், பலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள், பலர் மன உளைச்சலுக்கான வடிகாலாய் குடும்பத்தையும், பொதுமக்களையும் போட்டுத் தாக்குகிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஒரு அலசல் கட்டுரை இது.

ஒரு சிறு பட்டியலை (விபரம்) முதலில் இங்கே பார்ப்போம்.
01-01-2021 To 31-12-2021 வரை தமிழ்நாடு காவல் பணியில் இறப்புகள்:
ஜனவரி – 29, பிப்ரவரி – 22, மார்ச் – 27, ஏப்ரல் – 48,மே – 83, ஜூன் – 37, ஜுலை – 26,
,ஆகஸ்ட் – 25, செப்டம்பர் – 35, அக்டோபர் -24, நவம்பர் – 25, டிசம்பர் – 33
மொத்தம்= 414 –
அடுத்தது : வீரமரணம் – 02, கொலை – 01, கொரோனா – 81, தற்கொலை – 40
மர்மச்சாவு – 04, மாரடைப்பு – 59, விபத்து – 69, சுகவீனம் – 132 (உடல் நலக்குறைவு)
புற்றுநோய் – 23, பாம்புக்கடி- 01 – 2020 ஆம் ஆண்டில் (விடுபட்ட இறப்பு) – 02 சேர்த்து : மொத்தம் – 414
கொரோனா மரணம் குறித்து நாம் சொல்ல ஒன்றுமில்லை. 2021- ஆம் ஆண்டில் 81 பேர் அதனால்தான் உயிரை இழ்ந்துள்ளனர். அதே வேளையில் மாரடைப்பு மரணம் 59, விபத்து மரணம் 69, தற்கொலை, 40, உடல்நலக்குறைவு மரணம் 132 என்ற எண்ணிக்கை சாதாரண ஒன்றல்ல… மாரடைப்பு மரணம் 59 என்றால், விபத்து மரணம் அதைவிட அதிகமாக 69 என்ற எண்ணிக்கையைக் காட்டுகிறது – விபத்துக்கான இன்னொரு பெரிய காரணம், மன உளைச்சல்தானே ? உச்சக்கட்ட மன உளைச்சலைத்தானே தற்கொலை மரண எண்ணிக்கை (40 பேர் இறப்பு) சொல்கிறது !
முந்தைய 2020 ஆம் ஆண்டில் பார்த்தாலும் தற்கொலை மரணம் 48, உடல்நலக் குறைவு மரணம் 108, மாரடைப்பு மரணம் 59, விபத்து மரணம் 70 என்று தெரிய வருகிறது. 2021-ஆம் ஆண்டில் கொரோனாவால் 81பேர் இறந்தது போல் 2020 ஆம் ஆண்டில் இறப்பு இருக்கவில்லை, பாதியாகக் குறைந்து 40 பேர்கள் மட்டுமே கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவை விட அதிக எண்ணிக்கையில் தான், பிற காரண மரணங்கள் 2020- ஆம் ஆண்டில் இருந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் இறந்த காவல் துறையினரின் எண்ணிக்கை – 337 –
01/01/2020 – 31/12/2020 முடிய தமிழ்நாடு காவல்துறையில் 337 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன!
இறப்பின் தன்மை விபரம் : வீர மரணம் – 02, கொலை – 01, தற்கொலை – 48, கொரோனா – 40 உடல்நலக் குறைவு – 108, மாரடைப்பு – 59, விபத்து – 70,
புற்றுநோய் – 09

01/01/2022 To 31/03/2022 முடிய நிகழ்ந்துள்ள இறப்புகள் : ஜனவரி -26, பிப்ரவரி-30, மார்ச்- 22 – மொத்தம் 78 உயிர்கள். இறப்பின் தன்மை விபரம் : கொரோனா -01, புற்றுநோய் -03, தற்கொலை -13, மாரடைப்பு – 14, விபத்து -19, உடல்நலக்குறைவு – 28

கடந்த ஆண்டுகளில் (2020 – 2021) இறந்தவர்களின் எண்ணிக்கை – 337 + 414 = 751
2022 -ஏப்ரல் முடிய நடப்பு (இம்) மாதத்தில் காவல்துறையைச் சேர்ந்த
21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆண்டு வரிசைப்படியான கணக்கில் : 2020 – 337 – 2021 – 414 – 2022 – 99 (27/04/2022 வரை) மொத்தம் உயிரிழப்புகள் 850 எண்ணிக்கை ஆகும்.
ஒரு பக்கம் திறமையான காவல்பணிக்கு போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.க்கள், மண்டல ஐ.ஜி.க்கள், காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) வரை பரிசு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் 2020 தொடங்கி 2022 ஏப்ரல் வரையில் 850 போலீசார் உயிரிழந்திருக்கிறார்கள்…
“சென்னையைப் பொறுத்தவரை டிஜிபி போட்ட உத்தரவு சரியாகவே நடைமுறைப் படுத்தப்படுகிறது சார்… பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து கிடைக்காத வாராந்தர விடுமுறையை டிஜிபி சைலேந்தர்பாபு சார் கொண்டு வந்தார், அது சரியாகவே அனைவருக்கும் கிடைக்கிறது. அது போக, பிறந்தநாளில் ஒரு விடுமுறை, திருமணநாளில் சிறப்பு அனுமதி (பர்மிஷன்) என்று எல்லாமும் நடக்கிறது.
தென்மாவட்டங்களில் அது கேள்விக்குறிதான். சப் – இன்ஸ்பெக்டர் தொடங்கி இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி வரை மனசு வைத்தால்தான் அப்படியொரு விடுப்பை நினைத்துப் பார்க்கவே முடியும் !” என்கிறார், தூத்துக்குடியிலிருந்து நம்மைப் பார்க்க வந்திருந்த சீனியர் ஏட்டைய்யா…
இந்தக்கட்டுரையின் கட்டுரையின் இறுதியில் ஏட்டைய்யா ஒருவரின் குமுறல் தெரிகிறது. கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிபரக் குறிப்புகளில், காவல்துறையில் அதிக மரணத்துக்கான காரணங்கள் புரிகிறது.
கொரோனா மரணம் குறித்து நாம் சொல்ல ஒன்றுமில்லை. 2021- ஆம் ஆண்டில் 81 பேர் அதனால்தான் உயிரை இழ்ந்துள்ளனர். அதே வேளையில் மாரடைப்பு மரணம் 59, விபத்து மரணம் 69, தற்கொலை, 40, உடல்நலக்குறைவு மரணம் 132 என்ற எண்ணிக்கை சாதாரண ஒன்றல்ல… மாரடைப்பு மரணம் 59 என்றால், விபத்து மரணம் அதைவிட அதிகமாக 69 என்ற எண்ணிக்கையைக் காட்டுகிறது – விபத்துக்கான இன்னொரு பெரிய காரணம், மன உளைச்சல்தானே ? உச்சக்கட்ட மன உளைச்சலைத்தானே தற்கொலை மரண எண்ணிக்கை (40 பேர் இறப்பு) சொல்கிறது !

முந்தைய 2020 ஆம் ஆண்டில் பார்த்தாலும் தற்கொலை மரணம் 48, உடல்நலக் குறைவு மரணம் 108, மாரடைப்பு மரணம் 59, விபத்து மரணம் 70 என்று தெரிய வருகிறது. 2021-ஆம் ஆண்டில் கொரோனாவால் 81பேர் இறந்தது போல் 2020 ஆம் ஆண்டில் இறப்பு இருக்கவில்லை, பாதியாகக் குறைந்து 40 பேர்கள் மட்டுமே கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவை விட அதிக எண்ணிக்கையில் தான், பிற காரண மரணங்கள் 2020- ஆம் ஆண்டில் இருந்துள்ளது.
கொரோனாவா, கொளுத்தும் வெய்யிலோ, பேரிடர்க்காலமோ – எது எப்படி இருந்தாலும், போலீஸ் உதவி இல்லாமல் மக்களால் இயங்கத்தான் முடியுமா ? ஆயிரம் விமர்சனங்களை ஆயிரம் பேர் முன் வைக்கலாம்… ஒரேயொரு லாக்கப் டெத்தை மேற்கோள் காட்டி நூறு போலீஸ் ஸ்டேசன்களை திட்டித் தீர்க்கும் ஆசாமிகளால், பத்துபேருக்கு பாதுகாப்பு உறுதியை அளிக்கத்தான் முடியுமா? ஒருநாள் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை போலீஸ் ஸ்டேசன்களையும் பூட்டி விட்டால் தெரியும் – போலீஸ் உதவி எத்தனை மகத்தானது, மக்கள் நலனுக்கானது என்பது புரியும்…
காவல்துறையில் இருக்கும் கறைகளை, சிறுசிறு குறைகளை அவ்வப்போது சீர் படுத்திக் கொண்டே வந்து விட்டாலே போதுமானது, அனைத்தும் சரியாகி விடும் !
ந.பா.சேதுராமன்

Exit mobile version