Madras Kural

மாற்றுத் திறனாளிக்கு ஓட்டுனர் உரிமம் எளிதே !

மாற்றுத் திறனாளி ஓட்டுனர் உரிமம் பெறுவதும் எளிதுதான் நண்பர்களே, அது குறித்து இப்போது பார்க்கலாம்!

பொதுவாகவே பழகுநர் உரிமம் (எல். எல். ஆர்.,) பெற கல்வித்தகுதி தேவை இல்லை. மற்றபடி வயது சான்று, முகவரி சான்று கண்டிப்பாகத் தேவைப்படும்.
இந்த விபரங்களை ஆன் லைன் மூலம் தான் பதிவு செய்ய வேண்டும். எல்.எல்.ஆர்., பெற நினைப்போர் பெயரிலேயே மூன்று சக்கர வாகனம் இருக்கும் பட்சத்தில்தான் தான் எல்.எல்.ஆர்., உரிமம் பெறும் தகுதியும், உரிமையும் இருப்பதாக சட்டப்படி கருதப்படும்.

மாற்றுத்திறனாளியாக இருக்கும் ஒருவர், பழகுநர் உரிமம் பெற, இன்னொரு நபரின் வாகனத்தைக் கொண்டு வந்தாலோ, அந்த இன்னொருவர் வாகனத்துக்கான அனுமதிக் கடிதம் பெற்று வந்தாலும், எல்.எல்.ஆர். பெற அனுமதி இல்லை.
மூன்று சக்கர வாகனத்தை முறைப்படி பயனாளி பெயரில் வாங்க வேண்டும் என்றால், பயனாளிக்கு, வாகனத்தை விற்கும் நிறுவனம் அதை முறைப்படுத்தி வழங்கும். பழைய வாகனமாக இருந்தால் மெக்கானிக் அதை வடிவமைத்துக் கொடுப்பார். மேலும், அவர் சான்று பெற்று N. A.M.V. என்ற படிவத்தை பூர்த்தி செய்து சான்று பெறுவதோடு, வாகனத்தின் எடை (அன் லாடன் வெய்ட்) குறிப்பதும் அவசியம். அன் லாடன் வெய்ட் பெறுவதற்கான சான்றைக் கொடுத்த நடை எடைமேடை (ஆர்டர் : R. W.U.LW) விபரத்தையும் அதில், குறிக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்திலிருந்து இதர வாகனம் (இன் வேலிட் கேரேஜ்) என்று குறிக்க வேண்டும், அதையும் படிவத்தில் சேர்க்க வேண்டும். மற்றபடி இன்சூரன்ஸ், பொல்யூசன் சர்ட்டிபிகேட் அனைத்தும் பெற்ற பின், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சென்று வாகன தணிக்கை செய்து முடித்த பின்னர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அனைத்து ஆவணத்தையும் சமர்ப்பித்தால், பயனாளி பெயரில், ஆர்.டி. ஓ.வில் மாற்றம் செய்து கொடுப்பார்கள்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள் :

எல்.எல். ஆர். பெற கொடுக்க வேண்டிய ஆவணங்கள் : (1) ஆர்சி புக், (2) N. A.M.V படிவம், (3) இன்சூரன்ஸ், (4) பொல்யூசன் (புகை) சான்று.

பெயர் மாற்றத்துக்கு : (1) படிவ எண் : 29 ( எண்ணிக்கை 2) , (2) படிவ எண் : 30, (3) ஆதார் அடையாள அட்டை, (4) இருப்பிட சான்று, (5) வங்கிக் கணக்கு, (6) துணை சான்றாக நோட்டரி பப்ளிக் (சான்றுரைப்பாளர்) சான்று

இந்தியர்கள் வெளிநாட்டில் சென்று மோட்டார் வாகனங்கள்
ஓட்ட என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன் !

-இன்னும் நிறையவே சொல்கிறேன் !

உங்கள் ‘விகடகவி’ எஸ். கந்தசாமி –

Exit mobile version