Madras Kural

திராவிட இயக்க கவிஞர்களுக்கு நினைவரங்கம் ! முதலமைச்சரிடம் கோரிக்கை…

’நக்கீரன்’ இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும், ’இனிய உதயம்’ இதழின் இணையாசிரியருமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், தனது பிறந்த நாளுக்காகவும், அண்மையில் தான் பெற்ற அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்து அண்மையில் வாழ்த்து பெற்றார். அப்போது தாம் எழுதிய நூல்களுடன், திருவாரூர் தேர் வடிவ நினைவுப் பரிசையும் முதலமைச்சருக்கு கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் வழங்கினார். ’திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை’யின் தலைவரான கவிஞர், முதலமைச்சரிடம் அப்போது கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். மனுவில் உள்ள விபரம் :


1.திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முதன் முதலில் தன் இலக்கியக் கரங்களால் ஏந்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
2.திராவிட இயக்கக் கவிஞர் பெருமக்களான உவமைக் கவிஞர் சுரதா, கவியரசர் பொன்னிவளவன், கவிக்கோ அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களுக்கு ஒரே இடத்தில் இலக்கிய நினைவரங்கம் அமைப்பதோடு; அவர்கள் பெயரிலும் அரசு விருதுகளை வழங்கவேண்டும்.
3.பாட நூல்களில் திராவிட இயக்கப் படைப்பாளர்களின் படைப்புகளை 90 சதவீதம் இடம் பெறச் செய்து மாணவர்களின் இதயங்களில் இன உணர்வையும் மொழி உணர்வையும் விதைக்க, உரிய வழிவகைகளைச் செய்யவேண்டும்- என்கிற மூன்று முக்கிய கோரிக்கைகளுடன்; தமிழ் இலக்கியம் சார்ந்த கோரிக்கைகள் சிலவும் இடம் பெற்றிருந்தன.

Exit mobile version