Madras Kural

சென்னை சேர்மன்கள் யார் – யார் ?

மண்டலம் 1 – திமுக தோழமைக் கட்சிக்கு ஒதுக்கினால் ஏற்கனவே நகர்மன்றத் தலைவராக இருந்த ஜெயராமன் (CPI-M) அல்லது காங்கிரசை சேர்ந்த சாமுவேல் திரவியம் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளது. அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்
உடன் பிறப்புகள்.

பந்தயத்தில் முதலாவதாக திமுக பகுதி செயலாளர் தி.மு.தனியரசு (முதலமைச்சரிடம் வீர திர செயலுக்கான விருதை குடியரசு நாளில் பெற்றவர்) பெயரையே பரவலாகச் சொல்கிறார்கள். மாநில மாணவரணி பொறுப்பிலுள்ள அட்வகேட் கவீ.கணேசன் பெயரையும் ஒரு தரப்பு முன் வைக்கிறது.

மண்டலம் 2 -ல் உ.பி.க்கள் ஆறுமுகம் பெயரை சொல்கிறார்கள். இரண்டாவது முறை கவுன்சிலர். பணபலமும் படைபலமும் படைத்தவர் திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி சங்கரின் அன்பைப் பெற்றவர்.

நெசமா சொல்றேன், மண்டலம் 3 மற்றும் 4- குறித்து முடிவுக்கு வர முடியலே !

மண்டலம் 5 – ராயபுரம் இளங்கோ என்கிற இளைய அருணா (மா.செ.) போட்டியே இல்லாமல் தேர்வாகும் வாய்ப்பு அதிகம்.

மண்டலம் 6- ல் புனிதவதி எத்திராசன், பகுதி செயலாளரான வேலு போட்டியில் இருக்கிறார்கள்.

மண்டலம் 7- ல் எம்.இ.சேகர் மற்றும் ராஜகோபால் போட்டியில் இருக்கிறார்கள்.

மண்டலம் 8- ல் பரிதி இளம்சுருதி மற்றும் சென்னை மண்டலத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இருவரில் ஒருவரான அதியமான் ஆகியோரோடு பகுதி செயலாளர் பரமசிவத்தின் மனைவி வசந்தி பரமசிவம், இரண்டு முறை சேர்மன், ஒருமுறை ஆளுங்கட்சி தலைவர் பொறுப்பை வகித்த ராமலிங்கம் என கடும்போட்டி வார்டில் நிலவுகிறது. “மண்டலம் -8 ல் தொடர் செல்வாக்கு காரணமாக லதா வாசுவின் பக்கம் சேர்மன் இருக்கைக்கான அலை வீசுகிறது என்கிறார்கள்”.

மண்டலம் 9-ல் இன்னும் கடுமையான போட்டியும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. (சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி) பகுதி செயலாளரான தனசேகர் ( எ ) ஏ ஆர் பி எம் காமராஜ், மதன் மோகன், துணை மேயர் பதவிக்கு லிஸ்ட்டில் இருந்த
நே.சிற்றரசு (மா.செ.) என மும்முனை போட்டி உள்ளது.

மண்டலம் 10 -ல் 22 வயதேயான இளம் கவுன்சிலர் நிலவரசி துரைராஜ், முன்னாள் மா.செ. மற்றும் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளன. சென்னையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கட்சியின் பகுதிச் செயலாளரான கே.கே. நகர் தனசேகரன் ரேசில் தனி ஆளாக முதலில் தெரிகிறார்.

மண்டலம் 11 -ல் ஆலப்பாக்கம் கு. சண்முகம், செல்வகுமார் போட்டியில் உள்ளனர்.

மண்டலம் 13- ல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதரவைப் பெற்றவராக கருதப்படும்
இரா துரைராஜ் (பகுதி செயலாளர்), தொழிலதிபரும் அதிமுக ஆட்சிகாலத்தில் நெருக்கடிக்கு ஆளானவருமான வேளச்சேரி ஆனந்தம் ரேசில் உள்ளனர்.

மண்டலம் -14 -ல் முன்னாள் கவுன்சிலர் பாலவாக்கம் விஸ்வநாதன் பெயரையே அனைவரும் சொல்கிறார்கள். கட்சியின் இளைஞரணி பொறுப்பில் இருந்தவர். கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில்சிறந்த செயல்பாட்டால் பேசப்பட்டவர் விஸ்வநாதன். மண்டலம் 14 – ல் தமிழரசி சோமுவின் பெயர் தனியாக (ஸோலோ) நிற்கிறது. (பாலவாக்கம் சோமுவின் மகள் என்பது கூடுதல் பலம்)

மண்டலம் 15 -ல் வீ.எ. மதியழகன் பெயர் ஸ்ட்ராங்காய் நிற்கிறது. முன்னாள் மாவட்ட துணைச் செயலாளரும் நீலாங்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான நீலாங்கரை எட்டியப்பனின் மகன் இவர். பாரம்பரிய திமுக பின்னணி கொண்டவர். அடுத்ததாக முன்னாள் கவுன்சிலர் க. ஏகாம்பரம் பெயர் இருக்கிறது. ரியல் எஸ்டேட் மற்றும் கேபிள் டிவி தொழிலிலுள்ள இவர் மக்கள் பணியில் வேகமான நபர். குற்றப் பின்னணியில் அடிபடாதவர் என்கிறார்கள். முன்னாள் மண்டலக் குழு தலைவர் லியோ சுந்தரம் (அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்). சேர்மன் பந்தயத்தில் இவர் பெயரும் உள்ளது. (-பிரீத்தி எஸ். மற்றும் என்பியெஸ்)

Exit mobile version