சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டக் காவல் துறை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து திம்மாவரம் பகுதி தனியார் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் உள்ள பெண் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற முழு உடல் பரிசோதனையும் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் எஸ்.பி., அரவிந்தன், முகாமை துவக்கி வைத்தார். இசிஜி, எக்கோ, டி. எம். டி, மற்றும் பெண்கள் சிறப்பு பரிசோதனையான மேமோகிராம், அல்ட்ராசவுண்ட் போன்றவையும் மருத்துவர்கள்
மேற்கொண்டனர். நூற்றுக்கணக்கில் பெண் போலீசார் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். மதுவிலக்குப் பிரிவு போலீஸ் எஸ்.பி., துரைப்பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அசோகன், வடிவேல், முருகன், எஸ்.ஐ. கள் சங்கர், டில்லிபாபு பங்கேற்றனர். அப்போலோ சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் அதிகாரிகள் திரளாக இதில் கலந்து கொண்டனர்.
-பிரீத்தி எஸ்.