Madras Kural

கட்டுப்பாடு இல்லாத மோட்டார் சைக்கிள்கள்! இன்னும் எத்தனை பேரை முடக்குவார்களோ?

கட்டுப்பாடு இல்லாத மோட்டார் சைக்கிள்கள்! இன்னும் எத்தனை பேரை முடக்குவார்களோ? கட்டுப்பாடு இல்லாமல் வீதியில் சீறும் மோட்டார் சைக்கிள்கள் நாள்தோறும் பலரை முடமாக்கியும், உயிர்பலி வாங்கியும் பறக்கின்றன. அப்படி ஒரு சம்பவத்தால் ஒரே சமயத்தில் சாலைப்பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

https://madraskural.com/wp-content/uploads/2022/03/WhatsApp-Video-2022-03-07-at-8.14.21-PM.mp4

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சாலையின் ஓரம் உள்ள மணல் திட்டுக்களை நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் (மார்ச் -7) அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சீறி வந்த மோட்டார் சைக்கிள் சாலைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூட்டத்துக்குள் பாய்ந்தது. அதில் மூன்று பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த வாலிபரும் படுகாயமடைந்தார். விபத்தில் காயமடைந்த நான்கு பேரையும் பொதுமக்களும் போலீசாரும் உரிய நேரத்தில் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விபத்தின் தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவரின் வேகப்பயணம் அவரையும் அவரால் மூவரையும் முடக்கிப் போட்டிருக்கிறது.

– ‘தொண்டன்’ -பிகேஎம் –

Exit mobile version