தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 04.03.2022 அன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,4ஆம்தேதிகடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சிமற்றும் புதுவையில் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த இரண்டு நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின்னர் இலங்கை – தமிழ்நாடு கடற்கரை நோக்கி அது நகரலாம் என்பதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.