Madras Kural

போதையில் இது புதுசு! நேபாளம் டூ சென்னை வந்த கஞ்சா ஆயில் விற்பனை கும்பல்! கூண்டோடு வளைத்த போலீஸ் !

சென்னையில் போதைப் பொருள் பயன்படுத்துவதையும் விற்பதையும் முற்றிலும் தடுக்கும் பொருட்டு போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கடந்த வாரம் வடக்கு போலீஸ் இணை கமிஷனர் ரம்யாபாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் போதைப் பொருளை தயாரிக்கும் கும்பலை ஆந்திராவின் ஓங்கோலுக்கே சென்று தூக்கி வந்தது. இப்போதும் அதேபோல் நேபாள் டூ சென்னைக்கு கஞ்சா எண்ணையை கடத்தி வரும் கும்பல் குறித்த தகவல் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கிடைத்தது. தகவலின் பேரில் சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸ் ஸ்டேசன் எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர்.


அயனாவரம் – கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் சந்திப்பில்
(போதை தடுப்புக்கான நடவடிக்கை -Drive against Drugs) அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் சந்திப்பில் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலுடன் செங்குன்றத்தை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அழகுராஜா சிக்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ Hashish பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெல் போன்ற நிலையில் இருக்கும் கஞ்சா எண்ணெய் (Hashish) கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுவதும், கஞ்சா எண்ணெய்யை விற்பதற்காக நேபாளத்திலிருந்து வாங்கி வந்தும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டனர். – விகடகவி எஸ். கந்தசாமி

Exit mobile version