Madras Kural

நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றமா? விவசாய தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்.

https://madraskural.com/wp-content/uploads/2022/03/WhatsApp-Video-2022-03-07-at-8.16.26-PM.mp4

மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் காலை 7 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. பணிக்கு வருபவர்கள் பதிவேட்டில் கையெழுத்து இட்ட பின்னர் புகைப்படம் எடுக்கப்படுவதாகவும், மீண்டும் 9 மணிக்கு மற்றொரு முறை புகைப்படம் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இத்தகைய விதி முறைகளின் மூலம் நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க மத்திய அரசு மறைமுகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். மத்திய அரசின் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும், ஊதியத்தை 600 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

– ‘தொண்டன்’ பிகேஎம் –

Exit mobile version