Madras Kural

ஜேப்பியார் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம்!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், ”மனிதனின் தனித்துவம் அறிந்தால் மனிதத்தையும், நேயத்தையும், மகத்துவத்தையும் அறியலாம்” என்கிற தலைப்பில், பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு இயற்கையின் படைப்புகளில் முழு நியூட்ரான்கள் மனித பரிமாற்றத்தின் மூலப்பொருளான மூளையை புரிந்து (அறிந்து) கொள்ளவும் அதைப் பயன்படுத்தவுமே பகுத்தாய்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் ‘பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி’ கடந்த 21/ 2/ 2022 அன்று தொடங்கி தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்றது. டாக்டர் பென்னட் ஜே ராக்லண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி அளித்தார்.

ஒவ்வொரு தனி மனிதனின் ஆற்றல் திறன் மற்றும் நுண்ணறிவு பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளதை, டாக்டர் பென்னட் ஜே ராக்லண்ட் விரிவாக விளக்கினார். மேலும், டாக்டர் பென்னட் ஜே ராக்லண்ட் அவர்களின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றான நுண்ணறிவு சோதனை மற்றும் பகுத்தறிவு மூலம் மனித மூளை உருவாகும் விதம் பற்றியும் தெளிவாக விளக்கிப் பேசினார்.

”மனித மூளையை 12 நுண்ணறிவு கூறுகளாக பிரிக்கலாம், அதில் எட்டுவகையான அளவீடு செய்யலாம்” எனவும் படைப்பின் மூலம் மனிதனின் தனித்துவ வடிவமைப்பை ஆய்வாக டாக்டர் பென்னட் ஜே ராக்லண்ட் வெளிப்படுத்தியுள்ளார்.

”மனிதன் தனித்துவமானவன், உதாரணமாக கட்டைவிரலின் வடிவமைப்பிலே சாட்சி அமைந்துள்ளது. ஒருவருக்கு இருப்பது போன்ற கைரேகை மற்றவருக்கு இருப்பதில்லை, இதுவே மனிதகுல படைப்பின் மகத்துவத்திற்கும், தனித்துவத்திற்கும் சான்று” என்பதை துல்லிய ஆய்வுகளுடன் ஒப்பிட்டு டாக்டர் பென்னட் ஜே ராக்லண்ட் விளக்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் அனைவரும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் சோதனை மற்றும் பகுத்தாய்வு மற்றும் நுண்ணறிவு அறிக்கை எடுக்கப்பட்டு அதற்கான வழிமுறைகளை பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீத்தி எஸ். –

Exit mobile version