Madras Kural

காஞ்சி: அரசு ஜி.ஹெச். பிரசவ வார்டில் புதிய கட்டுப்பாடுகள் ! குழந்தை திருட்டை தடுக்க நடவடிக்கை.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடுதலில் இறங்கினர். குழந்தை மீட்கப்பட்டது. இந்நிலையில் பேறுகால (பிரசவ வார்டு) பிரிவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கல்பனா தெரிவித்துள்ளார்.
“குழந்தை கடத்திய பெண் கர்ப்பிணி என்றும் பரிசோதனைக்கு செல்வதாகவும் கூறித்தான் வார்டின் உள்ளே வந்துள்ளார். அதற்கான (வார்டு) நோட்டும் அவர் வைத்திருந்ததால் காவலாளிகள் அனுமதி அளித்துள்ளனர். குழந்தையை கடத்திக் கொண்டு வெளியே செல்லும் போது ஸ்கேன் எடுப்பதாக சொல்லி கர்ப்பிணிகளுடன் சேர்ந்து வெளியில் சென்றுள்ளார். எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க பேறுகாலப் பிரிவில் இயங்காமல் இருந்த ஒருசில கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக சரிபார்க்க பட்டுள்ளன. இனிமேல் அனுமதி அட்டை வைத்திருக்கும் இருவர் மட்டுமே குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்படுவர். மேலும் கட்டை- பை கொண்டு வந்திருந்தால் கண்டிப்பாக பரிசோதனை செய்திடவும் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் வெளியாட்கள் கண்டிப்பாக உள்ளே வர அனுமதி கிடையாது போன்ற புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்” இவ்வாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா தெரிவித்துள்ளார்.

-பிரீத்தி எஸ்.

Exit mobile version