Madras Kural

ஓ (MY GOD) மைக்ரான் ! மறைந்திருந்தே மிரட்டும் மர்மம் என்ன?

சீனாவின் வுகானிலிருந்து 2019 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது இந்த வைரசின் அட்டகாசம். இதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாமல் இருந்த 2019 வருடத்தில்கூட, கொரானாவின் வேட்டைக்கு விருந்தானவர்களின் எண்ணிக்கை விண்ணைத் தொடவில்லை. ஆனால் 2020 ஆம் ஆண்டின் இடைவெளியில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வகங்கள் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு அசுர வேகத்தில் களமிறங்கின…
ஒருவழியாக மிருகங்களுக்கு (ANIMAL STUDY)செலுத்தி ஆராய்ச்சி வெற்றி என்று கூறியதுடன், இன்று அரசின் அனுமதியையும் பெற்றுவிட்டனர் ! அதே வேகத்தோடு கோடிக்கணக்கில் தடுப்பூசி உற்பத்தி செய்யத் தொடங்கியது உள்நாட்டு மருந்து கம்பெனிகள்.

மேற்கண்ட கொரானா தடுப்பூசிகள் இன்னும் ஆய்வக ஆராய்ச்சியில்தான் இருக்கிறது என்கிறது உச்சநீதிமன்ற அறிக்கை. இதன் பக்க விளைவு எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இன்றுவரை எந்த மருத்துவ மாமுனிகளாலும் கணிக்க முடியவில்லை.
தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்தான் சாவுகளின் எண்ணிக்கை எகிறத் தொடங்கியது என்கிறார்கள். மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிந்தன. 24 மணி நேரமும் வீதிகளில் ஆம்புலன்சுகளின் அலறல் சத்தம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியது.

கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை மிகச் செழிப்பாக (?) இருந்தது. சாதாரண ஒரு நகராட்சி அலுவலகத்தில் மருந்து தெளித்தோம், புகையை பீய்ச்சி அடித்தோம் என்று மாதம் ஒன்றுக்கு ரூபாய் 50 லட்சம் வரை கணக்கு காட்டப்பட்டது.
2021- ல் தி.மு.க. அரியணையில் அமர்ந்ததும் கடுமையான நடவடிக்கைகளால், நகரம் மற்றும் கிராமங்களின் மூலை முடுக்கெங்கும் தடுப்பூசி மையங்கள் முகாமிட்டன. கொரானாவின் தாக்கம் கணிசமாக குறையத் தொடங்கினாலும், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மக்களின் மாமூல் வாழ்க்கை மீண்டும் மலரத் தொடங்கி, அவர்கள் மகிழ்ச்சியின் வாசலில் அடியெடுத்து வைக்கும்போது, அடுத்த இடி ஆப்பிரிக்க நாட்டிலிருந்து மீண்டும் வந்திறங்கியது புதிதாய் ஒன்று! மருத்துவ உலகம் அதற்கு ஓமைக்ரான் என்று பெயர் சூட்டு விழாவும் நடத்தி முடித்து விட்டனர்.
கொரானா, உருமாறிய கொரானா, கருமாறிய கொரானா, ஆல்பா, காமா, டெல்டா நோய்க்கிருமிகளுக்கு நாமகரணம் நடத்தினர்.
இதில் சமூக ஆர்வலர்களின் கேள்வி என்னவென்றால், வருடா வருடம் ஜனவரி, பிப்ரவரி போன்ற மாதங்களில் மட்டும்தான் இந்த வைரஸ் தன் வேட்டையை ஆரம்பிக்குமா என்பதே ! ஆட்சியாளர்கள் எப்போதும் பொதுமக்களை ஒருவித பீதியில், பயத்தோடும், பதற்றத்தோடும்தான் வைத்திருக்கிறார்கள். இதன் பின்னணி மட்டுமே எங்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது என்கிறார்கள்…
தடுப்பூசி போடாதவர்கள் எந்த கவலையுமில்லாமல், சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் தான் அதிகமாக செத்து மடிகிறார்கள். வலைதளங்கள்கூட இந்த வதந்திகளை வேகம் பிடிக்கச் செய்வதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் சதவீதம்தான் அதிகம் என்கிறார்கள். 1வது அலை, 2வது அலையை தொடர்ந்து இன்று 3வது அலையை கட்டுபடுத்துவதில் வேகம் காட்டுவதாக சொல்கிறார்கள்…

ஊடகங்கள் இதை ஊதிப் பெரிதாக்குவதனால்தான் மக்கள் பீதியில் உறைந்து கிடக்கிறார்கள். முதலில் சுகாதாரத்துறை ஊடகங்களுக்கு பேட்டியும், செய்தியும் கொடுப்பதை நிறுத்தினால் போதும். ஓமைக்ரான் தானாகவே ஓட்டம் பிடித்துவிடும். கொரானாவின் தாக்கத்தால் குறுகிய நாட்களில் கோடீஸ்வரர் ஆனவர்கள், மருந்து கம்பெனிகளும், மருந்துக் கடை உரிமையாளர்களும், பிரபல ஸ்டார் மருத்துவமனை அதிபர்களும்தான்…

மக்களின் பாதி உயிர் பறிபோனதற்கு பயமும், பதற்றமுமே மூலகாரணம். ஆனால் இன்று மீண்டும் 2019- போல புது கணக்கு ஆரம்பித்து விடுமோ, அரசின் நடவடிக்கைகள் என்ற அச்சத்திலிருக்கிறார்கள் அப்பாவி மக்கள். தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் மக்களின் அச்சத்தைப் போக்குவார் என்று நம்புவோம்! -கட்டுரையாளர்: சீனியர் ஜர்னலிஸ்ட் இந்திரகாந்த்.

Exit mobile version