Madras Kural

’உங்களில் ஒருவன்’ நூல் !
திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை முக்கிய தீர்மானம்.

திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவையின் இணைய வழி நிர்வாகக் குழு கூட்டம், பேரவையின் தலைவர் மதிப்புறு முனைவர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் நடந்தது. பேரவையின் நெறியாளர் கவிக்கோ துரை வசந்தராசன், துணத் தலைவர் கவிமாமணி வெற்றிப்பேரொளி, எழுத்தாளர்- வழக்கறிஞர் பேரவையின் செயலாளர் எம்.எம்.தீன், அரசு வழக்கறிஞர் – எழுத்தாளர், இணைச்செயலாளர் அன்னக்கொடி, பொருளாளர் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், , கவிஞர் முல்லை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள் :

  1. தமிழகத்தின் இடர் நிலையைக் களைந்து, அனைத்து வகையிலும் நல்லாட்சியைத் தந்து கொண்டிருக்கும் மாண்பனை முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை, தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
  2. தனது வாழ்க்கைப் பயணத்தில் 69-ஆம் வயதில் அடி வைத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கு, இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
  3. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் ’உங்களில் ஒருவன்’ நூல், 60 ஆண்டுகால தமிழக அரசியல் நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த வரலாற்று ஆவண நூல் என்பதால், இதை வாழ்த்தி வரவேற்பதோடு, நூல் குறித்த ஆய்வரங்குகளை நாடெங்கிலும் நடத்திப் பரப்புரை செய்வது என்றும் பேரவை ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
  4. திராவிட வரலாற்றின் முதன்மைக் கவிஞரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு, தமிழகத்தின் தலை நகரான சென்னையில் ஒரு மணி மண்டபம் அமைக்குமாறு, தமிழர்களுக்கான ஆட்சி அமைந்திருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசை, வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கை அண்மையில் முதலமைச்சரிடம் நேரில் வைக்கப்பட்டிருக்கிறது.
  5. திராவிட இயக்கக் கவிஞர்களான சுரதா, பொன்னிவளவன், முடியரசன், கவிக்கோ அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களுக்கு, சென்னையில் ஒரே இடத்தில் நினைவரங்கம் அமைக்க வேண்டும் என்றும், இத்தகைய திராவிட இயக்கக் கவிஞர்களின் பெயரில் விருதுகளை அறிவிக்கவேண்டும் என்றும், தமிழ்நாடு அரசை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். இந்த கோரிக்கையும் அண்மையில் முதலமைச்சரிடம் நேரில் வைக்கப்பட்டிருக்கிறது.
  6. தமிழ்நாட்டு மண்ணின் பண்பாட்டு மாண்புகளும், நம் இன மொழி உணர்வுகளும், வருங்காலத் தலைமுறையினரின் இதயங்களில் விதைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசரத் தேவையாகும். எனவே, அதற்கு இசைவாக தமிழ்நாட்டின் பாடத் திட்டத்தில், திராவிட இயக்கப் படைப்பாளர்களின் படைப்புகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை, இந்த பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
    -மேற்கண்ட தீர்மானங்களோடு, இனமொழி உணர்வுடன் திராவிடச் சிந்தனை கொண்ட படைப்பாளிகள் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடுவது என்றும் இணைய வழி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது…
  7. -தேமதா –
Exit mobile version